தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு பயிற்சி

சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு குறித்து தமிழ்நாடு மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் 9ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 23ம்  தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், மூத்த வக்கீல்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்வில் கலந்துகொள்ள உள்ள வக்கீல்களுக்கு பயிற்சி  அளிக்க உள்ளனர். பயிற்சியில் சேர விரும்பும் வக்கீல்கள் தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும், அல்லது நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும்.

Advertising
Advertising

Related Stories: