×

141வது பிறந்தநாள் பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை

சென்னை: பெரியாரின் 141வது பிறந்தநாளையொட்டி நேற்று காலை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று பெரியாரின் 141வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை, அண்ணா மேம்பாலம்  அருகில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, தங்கமணி,  ஜெயக்குமார், சரோஜா, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, பெஞ்சமின், நிலோபர் கபில், பாண்டியராஜன், தமிழக தலைமை செயலாளர் சண்முகம், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள்,  எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் கார்த்திக், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) ரவீந்திரன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

Tags : birthday ,Periyar ,Chief Minister , 141st ,birthday, Periyar, Chief Minister
× RELATED சென்னை அருகே திருமுல்லைவாயலில் உள்ள...