நீதிமன்ற உத்தரவுப்படி பேனர் அகற்றிய அதிகாரிக்கு அடிஉதை கொலை முயற்சி வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளர் கைது: எழும்பூரில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கொடி அகற்றிய மாநகராட்சி செயற் பொறியாளரை அடித்து உதைத்த வழக்கில், மதிமுக தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரை போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ்  கைது செய்தனர்.

பள்ளிக்கரணயில் பேனர் விழுந்து, சுப (23) என்ற இன்ஜினியர் பலியானார்.இதையடுத்து பேனர் தொடர்பான வழக்கு கடந்த 13ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது திருமண நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சிகள், பொது  நிகழ்ச்சி, பிறந்தநாள் விழாக்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க கூடாது என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்  நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சென்னையில் சாலையோரம் வைக்கப்பட்ட கொடி, பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றி வருகின்றனர்.அந்த வகையில், ேநற்று முன்தினம் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா மதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மதிமுக சார்பில் பொதுக்கூட்டமும் நடந்தது. இந்த கூட்டத்திற்காக  மதிமுக சார்பில் சைதாப்பேட்டை முதல் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் வரை கொடிகள் வரிசையாக வைக்கப்பட்டன.
Advertising
Advertising

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி அடையாறு செயற்பொறியாளர் வரதராஜன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மதிமுக சார்பில் சாலையோரம் வைக்கப்பட்ட கொடிகளை அகற்றி வந்தனர். அப்போது பொதுக்  கூட்டத்திற்கு வந்த மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணி (50) கொடிகள் அகற்றப்படுவதை பார்த்து செயற்பொறியாளர் வரதராஜனிடம் தகராறில் ஈடுபட்டார்.உடனே, நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் பேனர்களை அகற்றி  வருகிறோம் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதிமுக மாவட்ட செயலாளர் சுப்ரமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாநகராட்சி செயற் பொறியாளர் வரதராஜனை கடுமையாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.இதை தொடர்ந்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாநகராட்சி 171வது வார்டு இளநிலை பொறியாளர் தர் தாக்குதல் நடத்திய மதிமுக மாவட்ட செயலாளர் சுப்ரமணி மீது புகார் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது மதிமுக மாவட்ட செயலாளர் மாநகராட்சி பொறியாளரை தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து மதிமுக தென்  சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சுப்ரமணி மீது ஐபிசி 294 (பி), 307, 323, 353 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக ேநற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.இதற்கிடையே மதிமுக மாவட்ட செயலாளர் கைதை கண்டித்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று காலை மதிமுகவினர் 100 பேர் திடீரென போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் எழும்பூரில்  பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: