தயாரிப்பு, விற்பனை ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய அரசு அழைப்பு

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் சில மாடல்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி, பிற நிறுவனங்களையம் இந்தியாவில் அதிகமாக உற்பத்தி மேற்கொள்ளச்செய்து இந்தியாவை எலக்ட்ரானிக்  பொருட்களின் உற்பத்தி மையமாக மாற்ற மத்திய அரசு விரும்புகிறது. இதுதொடர்பாக ஆப்பிள் உட்பட பல்வேறு எலக்ட்ரானிக் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: இந்தியாவில் ஆப்பிள்  நிறுவனத்தின் முதலீடு மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. இந்நிலையில், சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள் நிறுவனம், சாம்சங் நிறுவனம் ஆகியவை இந்தியாவில் தங்களது மொபைல் போன் தொழிற்சாலைகளை  மேலும் நிறுவி கூடுதலாக இங்கு உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அரசு விரும்புகிறது.

Advertising
Advertising

இந்தியாவில் தேவையான அளவு மனித வளம் உள்ளது. முதலீடு செய்வோருக்கு ஆதரவான எளிமையான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அவற்றுக்கு ஊக்கச்  சலுகைகள் வழங்கப்படும்.

 சர்வதேச நிறுவனங்கள் உள்நாட்டில் உள்ள மற்ற சிறிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு இந்தியாவை சர்வதேச அளவில் பெரும் ஏற்றுமதி நாடாக மாற்ற வேண்டும். இதற்கு அரசு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கித்  தருவதோடு தேவையான சலுகைகளையும் அளிக்கும். இதுதொடர்பாக மத்திய தொழில்நுடபம் மற்றும தகவல் தொடர்புத் துறையுடன் ஆலோசனை நடத்தி விரிவான திட்டத்தை விரைவில் நிதி ஆயோக் அறிவிக்கும் என்றும் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

Related Stories: