வருங்கால வைப்பு நிதி வட்டி 8.65 சதவீதம்

புதுடெல்லி: தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) 2018-19ம் நிதியாண்டிற்கு வட்டி விகிதம் 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 6 கோடி பேர் பயனடைவார்கள் என்று  மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎப்ஓ) மத்திய அறங்காவலர்கள் வாரியத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடந்த நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவீதமாக  நிர்ணயம் செயயப்பட்டது.  இந்த முடிவு மத்திய நிதியமைச்சக்த்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

 மத்திய நிதியமைச்சகம் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. இதனால் சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்று டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசுகையில் மேற்கண்ட தகவலை அமைச்சர்  தெரிவித்தார். தற்போது, இபிஎப்ஓ நிறுவனம், பிஎப் பணம் திரும்பப் பெறுபவர்களுக்கு 2017-18ம் நிதியாண்டிற்கு 8.55 சதவீதம் வட்டியுடன் கணக்கிட்டு வழங்குகிறது.

Related Stories: