×

உலக பாக்சிங் கால் இறுதியில் அமித் பாங்கல்

மாஸ்கோ: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 52 கிலோ எடை பிரிவு கால் இறுதியில் விளையாட இந்திய வீரர் அமித் பாங்கல் தகுதி பெற்றார்.ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடந்து வரும் இந்த தொடரின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில், துருக்கியின் பதுஹான் சிட்ப்சியுடன் நேற்று மோதிய பாங்கல் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றார். இவர் ஆசிய விளையாட்டுப்  போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய வீரர்கள் மணிஷ் கவுஷிக் (63 கிலோ), சஞ்ஜீத் (91 கிலோ) ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறி பதக்க நம்பிக்கையை கொடுத்துள்ளனர்.

Tags : Amit Pankal ,World Boxing Quarter ,Amit Pangal , World Boxing, quarter, Amit Pangal
× RELATED டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...