×

‘விரைவில் இந்தியா, பாக். பிரதமர்களை சந்திப்பேன்’

வாஷிங்டன்: அமெரிக்காவில் வருகிற 22ம் தேதி ஹவுடி மோடி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சுமார் 50 ஆயிரம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர்  கூட்டாக பங்கேற்று பேசவுள்ளனர்.  இதனிடையே, அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், “விரைவில் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசவுள்ளேன். இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையேயான பதற்றத்தை குறைப்பதில் நிறைய  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.  காஷ்மீர் என்று குறிப்பிடாமல் இருநாட்டு பிரதமர்களை சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் எங்கு, எப்போது இம்ரானை சந்தித்து பேசவுள்ளார் என்பது குறித்த விவரங்களையும் டிரம்ப் தெரிவிக்கவில்லை.

Tags : Pak ,Prime Ministers ,India , Soon India, Pak ,PMs
× RELATED பாக். விமான விபத்து பலி 97 ஆக உயர்வு: 2 பேர் படுகாயங்களுடன் மீட்பு