×

மின்வாரியத்தை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: தமிழக அரசை கண்டித்து தொமுச சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலக நுழைவாயில் முன்பு, தமிழக அரசையும், மின்வாரியத்தையும் கண்டித்து நேற்று தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் ரத்தினசபாபதி தலைமை  வகித்தார். மாநிலத்தலைவர் சசிகுமார், மாநில துணை தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, ‘‘மின்வாரியத்தில் உள்ள 40,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். கேங்மேன் பதவியை ரத்து செய்ய வேண்டும்.  15,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.  1.12.2019 ஊதிய உயர்வு பேச்சு வார்த்தைக்கு குழு உடனே அமைத்திட வேண்டும்.  தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்களை காலதாமதமின்றி பொது வருங்கால வைப்பு நிதி கடன் மற்றும் ஈட்டிய விடுப்பு காசாக்குதல் மற்றும்  இதர படிகள் உடனே வழங்கிட வேண்டும்.  தொழிற்சங்கங்களுடன் செய்து கொண்ட வேலை பளு ஒப்பந்தப்படி புதிய பதவிகளை உடனே அனுமதித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.Tags : Demonstration ,participants ,TMC ,TOMS , Condemning , electricity, TOMS,participants
× RELATED ஆதார் போதும்; உடனே பான் எண் கிடைக்கும்