அப்போலோ மருத்துவமனையில் தொற்றல்லாத நோய் சிகிச்சைக்கு ‘புரோஹெல்த்’ சுகாதார திட்டம்: தலைவர் பிரதாப் ரெட்டி துவக்கி வைத்தார்

சென்னை: தொற்று அல்லாத நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் அப்பல்லோ மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள “புரோஹெல்த்” சுகாதார திட்டத்தை அக்குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தொடங்கி  வைத்தார். தொற்று அல்லாத நோய்களான பக்கவாதம், சர்க்கரை நோய், புற்று நோய், உடல் பருமன், தூக்கமின்மை ஆகிய நோய்களை தொடக்கத்தில் இருந்து கண்காணிக்கவும், அவற்றுக்கு சிறப்பு அளிக்கவும் அப்போலோ மருத்துவமனை “புரோஹெல்த்”  என்ற விரிவான சுகாதார மேலாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் அப்போலோ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.  இதன் பிறகு அவர் பேசியதாவது:  புரோஹெல்த் திட்டம் மிகவும் சக்திவாய்ந்த உடல் நல சுகாதார மேலாண்மை திட்டம் ஆகும்.  20 மில்லியனுக்கு அதிகமான சுகாதார சோதனைகளை அடிப்படையாக கொண்டு இந்த திட்டத்தின் செயல்பாடுகளை அப்போலோ மருத்துவர்கள்  வடிவமைத்துள்ளனர்.

Advertising
Advertising

தொற்றுநோய் அல்லாத நோய்கள் சுனாமி போல உலகத்தை அச்சுறுத்துகிறது. அதன்படி புற்றுநோய்,  சர்க்கரை நோய், உடல் பருமன் ஆகிய நோய்கள் பொதுமக்களை அதிகளவில் பாதிக்கிறது. இந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை  மாற்றி புதிய முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவது தான் இந்த அப்போலோ புரோஹெல்த் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம்  உயிரிழிப்புகளை தடுக்க உதவும் என்று நாம் நம்புகிறேன். மனித உடலில் கற்பனை மதிப்பு 6 டிரில்லியன் டாலர்களை மேல் ஆகும். அந்த விலை மதிப்பற்ற உடலை பாதுகாப்பது நமது பொறுப்பாகும். எனவே தொற்று  நோய் அல்லாத நோய்களின் மீது போரை அறிவித்து அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ உறுதி ஏற்போம்.இவ்வாறு அவர் பேசினார்.

அப்போலோ நிறுவனத்தின் துணை தலைவர் ப்ரீதா ரெட்டி, பேசுகையில், ‘‘தொற்று நோய் அல்லாத நோய்கள் மிக பெரிய சவாலாக உள்ளது. அப்போலோ புரோஹெல்த் திட்டம் இந்த நோய்களை குணப்படுத்தி மக்களின் வாழ்க்கையில்  உறுதியான மாற்றங்களை நிகழ்த்தும்” என்றார்.  இதில் அப்போலோ அறக்கட்டளையின் துணைத் தலைவர் உபாசனா கெமினேனி கொனிடெலா உள்ளிட்ட அப்போலோ மருத்து வமனையின் மருத்துவர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: