அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

திருவொற்றியூர்: திருவான்மியூரிலிருந்து எண்ணூர் நோக்கி (தடம் எண்.1 சி) மாநகரப் பேருந்து நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது திருவொற்றியூர் சுங்க சாவடி பேருந்து நிறுத்தத்திலிருந்து 5 இளைஞர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். படியில்  பயணம் செய்தபடி ரகளையில் ஈடுபட்டு வந்த அவர்களை நடத்துனர் நித்தியானந்தம் உள்ளே அழைத்துள்ளார். விம்கோ நகர் பஸ் நிறுத்தம் அருகே பஸ் நின்றபோது கீழே இறங்கிய அந்த இளைஞர்கள் நடத்துனர் நித்தியானந்தத்தை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த பணபையை பறிக்க முயன்றனர். நித்தியானந்தம் அவர்களிடம் இருந்த பையை மீட்டு  பேருந்துகள் சென்றுவிட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் சாலையில் இருந்த கல்லை பஸ்சின் மீது சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் பேருந்தில் முன்பக்கம் மற்றும் பின்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது சம்பந்தமாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: