பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் மெக்கானிக் கைது

சென்னை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மெக்கானிக்கை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் சண்முகம் (50). இவர் அதே பகுதியில் பைக் மெக்கானிக்காக உள்ளார். சண்முகம் மெக்கானிக் கடை அருகே வசித்து வரும் 14 வயது பள்ளி மாணவிக்கு அடிக்கடி செலவுக்கு பணம் கொடுத்து  பழகி வந்துள்ளார். மாணவியின் பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இதனால் விடுமுறை நாட்களில் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருப்பது வழக்கம். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி  கொண்ட சண்முகம், மாணவியின் வீட்டிற்குள் சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

Advertising
Advertising

கடந்த வாரம் மாணவியின் வீட்டிற்குள் புகுந்த மெக்கானிக் கதவை தாழ்ப்பாள் போடுவதை எதிர் வீட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் பார்த்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து வீட்டிற்கு வந்த மாணவியின் பெற்ேறாரிடம் தெரிவித்தார்.  பின்னர் சம்பவம் குறித்து பெற்றோர் மகளை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 6 மாதங்களாக மெக்கானிக் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாக கூறினார். அதைதொடர்ந்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் மெக்கானிக் சண்முகத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவியிடம் தவறாக  நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் ஐபிசி 509 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் சண்முகத்தை கைது செய்தனர்.

Related Stories: