சென்னை முழுவதும் 28 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்: போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு

சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் 28 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து  போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனந்தகுமார் மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பாண்டி மடிப்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் புதுவண்ணாரப்பேட்டை சட்டம் ஒழுங்கிற்கும்,  காத்திருப்போர் பட்டியலில் இருந்த கந்தவேல் மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த மேனகா மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகாலட்சுமி மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர்  பட்டியலில் இருந்த சாமூண்டீஸ்வரி பழவந்தாங்கல் குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அமுதா கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜேஸ்வரி குமரன் நகர்  குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கவிதா மத்திய குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கே.எஸ்.ராஜேஸ்வரி ஆதம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த எம்.மேனகா மாதவரம்  அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த மஞ்சு வரலட்சுமி கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தமிழ்செல்வி புளியாந்தோப்பு குற்றப்பிரிவுக்கும்,  காத்திருப்போர் பட்டியலில் இருந்த கோமதி குரோம்பேட்டை குற்றப்பிரிவுக்கும், குமரன் நகர் குற்றப்பிரிவில் இருந்த சசிகலா சிட்லப்பாக்கம் குற்றப்பிரிவுக்கும்,  கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த லதா பல்லாவரம்  குற்றப்பிரிவுக்கும், கொத்தவால்சாவடி குற்றப்பிரிவில் இருந்த மாலதி செம்மஞ்சேரி குற்றப்பிரிவுக்கும், குரோம்பேட்டை குற்றப்பிரிவில் இருந்த சிவராஜன் சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவுக்கும், பாதுகாப்பு பிரிவில் இருந்த செல்வராணி  பட்டினப்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த லட்சுமி துறைமுகம் குற்றப்பிரிவுக்கும், அண்ணாநகர் குற்றப்பிரிவில் இருந்த மார்டின் பிரேம் ராஜ் கொடுங்கையூர் குற்றப்பிரிவுக்கும், கொடுங்கையூர்  குற்றப்பிரிவில் இருந்த சத்தியன் எழுகிணறு சட்டம் ஒழுங்கிற்கும், வடக்கு கடற்கரை குற்றப்பிரிவில் இருந்த மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த செல்வராணி குழந்தைகளுக்கு எதிரான தடுப்பிரிவுக்கும்,  ஏழுகிணறு சட்டம் ஒழுங்கில் இருந்த ரத்தினவேல் பாண்டியன் பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த கவுரி குற்ற ஆவண காப்பகத்திற்கும் பணியிடம் மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: