×

‘பி.வி.சிந்துவை காதலிக்கிறேன்... கல்யாணம் பண்ணி வைங்க’: 75 வயது முதியவர் கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம்:  இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து (24). உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சமீபத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதன் பின்னர் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இந்த ரசிகர் கூட்டத்தில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே விரதக்குளம் பகுதியைச் சேர்ந்த 75 வயதான மலைச்சாமியும் இணைந்துள்ளார். அது மட்டுமல்ல... அவரை காதலிப்பதாகவும், மணம் முடிக்க விரும்புவதாகவும் கூறி கலெக்டரிடம் நேற்று மனு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவர் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவிடம் நேற்றுமுன்தினம்  நடந்த குறைதீர் கூட்டத்தில் அளித்த மனுவில், ‘‘விளையாட்டுத்துறையில் எனக்கு தீராத ஆர்வம் உள்ளது. பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலித்து வருகிறேன். அவரை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். எப்படியும், எங்கிருந்தாலும் சிந்துவை மணம் முடித்தே தீருவேன். அவரை விடப்போவதில்லை’’ என்று தெரிவித்துள்ளார். மனுவுடன் பி.வி.சிந்துவின் புகைப்படத்தையும் இணைத்து கொடுத்துள்ளார். இவரை அங்கிருந்த அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர். இவர் ஒவ்வொரு குறைதீர்கூட்டத்தின் போதும், இதுபோல சர்ச்சைக்குரிய மனுக்களை கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : wants ,PV Sindhu , 70-year-old ,wants to marry PV Sindhu, files petition, says will kidnap her otherwise
× RELATED மத வழிபாட்டுத் தலங்களை திறக்க கோரிய மனு: உயர்நீமன்றம் தள்ளுபடி