×

நீதிமன்றத்தில் வாதாடிய போது மயங்கி விழுந்து வக்கீல் சாவு

கொடைக்கானல்: திண்டுக்கல், சாலை ரோட்டை சேர்ந்த மூத்த வக்கீல் ரகுபதி (84). இவர் குற்றவியல் துறை வக்கீலாக திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் நீதிமன்றங்களில் பணியாற்றி வந்தார். இவர் அட்டுவம்பட்டியை சேர்ந்த ஜெயசீலனுக்காக, வழக்கு ஒன்றில் வாதாட கொடைக்கானல் ஜேஎம் நீதிமன்றத்துக்கு நேற்று வந்தார். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து வாதாடிக் கொண்டிருந்தார்.

கொடைக்கானல் நீதிபதி தினேஷ்குமார், விசாரணையை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது வக்கீல் ரகுபதி திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.
உடனடியாக மேல்சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு ரகுபதி கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வக்கீல் ரகுபதி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தரப்பட்டது.

Tags : Advocate ,court , Advocate dies ,he argues in court
× RELATED மாணவர்கள், பெற்றோர் தொடராத நிலையில்...