கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்து பலி 22 ஆனது

திருமலை: ஆந்திராவில் தேவிபட்டிணம் மண்டலம், கஞ்சனூர் அருகே கடந்த 15ம்தேதி கோதாவரி ஆற்றில் 73 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 27 பேர் உயிருடனும், குழந்தைகள் உட்பட 12 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை சிறுமி ஹாஷினி உட்பட மேலும் 10 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. ஹாஷினியின் தந்தை சுப்பிரமணியம் உட்பட 24 பேரை பேரிடர் மீட்பு குழுவினர், கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் நேற்று 3வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர். ஹாஷினியின் தாய் மதுலதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: