×

எய்ம்ஸ் கட்டுமான பணி தமிழக அரசு அனுமதி

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், தோப்பூரில் 1,264 கோடி மதிப்பீட்டில் சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. ஆனால் கட்டிட பணிகள் துவங்கவில்லை. இந்நிலையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முன் அனுமதி வழங்காததால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி துவங்கவில்லை என ஆர்டிஐ மூலம் கடந்த ஜூலை மாதம் தகவல் வெளியானது. தற்போது எய்ம்ஸ் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவிருக்கும் மத்திய மருத்துவ கட்டுமான பணிகள் நிறுவனத்திற்கு முன் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை கலெக்டர் ராஜசேகர் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார்.

Tags : government ,AIIMS ,Tamil Nadu , Tamil Nadu government's, permission to build AIIMS
× RELATED சோதனை சாவடியில் அனுமதி மறுப்பால்...