மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,000 கனஅடி

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. நேற்று  முன்தினம் மாலை 17,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலையும்  அதே அளவில் நீடிக்கிறது. அதேபோல், அணையிலிருந்து டெல்டா  பாசனத்திற்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய்  பாசனத்திற்கு 900 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 120  அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

Tags : Mettur Dam , water level for Mettur Dam, 17,000 cubic feet
× RELATED மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு