×

ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கில் பிடிவாரன்ட் நீதிமன்றத்தில் ஆஜராக தமிழக விவசாயிகள் டெல்லி பயணம்

திருச்சி: டெல்லியில் கடந்த 29-11-2018 அன்று இந்தியா முழுவதும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், 60வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதந்தோறும் 5ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கைகளாகும்.

இதில் இந்தியா முழுவதும் இருந்து 3ஆயிரம் விவசாயிகள் கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 500 விவசாயிகள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டம் நடத்தி 10 மாதங்களுக்குபின், அய்யாக்கண்ணு உள்ளிட்ட 500 விவசாயிகள் மீது டெல்லி ரயில்வே போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இவர்கள், இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜராகும்படி பிடிவாரண்ட்டை அனுப்பி வைத்துள்ளனர்.  இதற்காக, நேற்று காலை திருச்சியில் இருந்து ரயில் மூலம் டெல்லி புறப்பட்டனர்.

Tags : Tamil Nadu ,court ,Delhi , Tamil Nadu farmers travel, Delhi in court
× RELATED தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச...