×

கடல் நீரை குடிநீராக்கவதற்காக சென்னை பேரூரில் ரூ.6078 கோடியே 40 லட்சம் மதிப்பில் மூன்றாவது திட்டம்: அரசாணை வெளியீடு

சென்னை: கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்துடன் இணைந்து கடல்நீரை குடி நீராக்கும் மூன்றாவது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, சென்னை பேரூரில் 400 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கவதற்காக ரூ.6078 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து புதிய அரசாணையை வெளியிட்டு உள்ளது.

சென்னையில் ஏற்கனவே கடல்நீரை குடிநீராக்கும் 2 திட்டங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் குடிநீர் தேவைக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தினமும் 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 10 ஆண்டுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் வட சென்னை பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை அடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியிலும் 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இங்கிருந்து தென்சென்னை பகுதியான திருவான்மியூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளுக்கு தினமும் 80 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த 2 திட்டத்துக்கும் ரூ.1140 கோடி வரை செலவானது. இந்நிலையில் தற்போது சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் 3 ஆவது திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பேரூரில் 400 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கவதற்காக ரூ.6078 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து புதிய அரசாணையை வெளியிட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பேரூரில் புதிதாக ஒரு திட்டம் தொடங்கப்படுகிறது. மொத்தம் 400 எம்எல்டி தண்ணீரை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டது இந்த பிரிவு. ரூ.6078.40 செலவில், ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படும். இந்த உற்பத்தி பிரிவால் தாம்பரம், பல்லாவரம், மாதம்பாக்கம், குன்றத்தூர் மற்றும் காட்டாங்குளத்தூர் போன்ற பகுதிகளில் கிட்டத்தட்ட 22.67 லட்சம் மக்களுக்களின் நீர் தேவை பூர்த்தி செய்யப்படும். மெட்ரோ வாட்டர் இதுபோன்ற சுத்திகரிப்பு ஆலைகளை நம்புவதற்கு பதில், சென்னை பெருநகரப் பகுதியில் நீர்நிலைகளை மீட்டெடுப்பதில் கவனம் வைக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Tags : Chennai Barur ,Chennai Porur ,Govt , Seawater, Drinking Water, Chennai Porur, Govt
× RELATED வாக்கு எண்ணிக்கை மையமான அரசு...