×

உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார்

புதுடெல்லி: உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடாக மாற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு ஆகும். ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது.

இதனிடையே நாட்டின் தொழில்துறை உற்பத்தி புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறுகையில், உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் மந்த நிலை உள்ளது. 2024 , 2025-ல் 5 லட்சம் கோடி டாலர் இந்திய பொருளாதாரம் என்பது சாத்தியம் தான் என்றார்.

Tags : downturn ,Rajiv Kumar Worldwide ,Rajiv Kumar , Recession, Finance Aayog, Vice President, Rajiv Kumar
× RELATED தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு