×

ஹெல்மெட் அணியாமல் சென்று பலியானவர்களின் எண்ணிக்கை 43,600: உத்திரப்பிரதேசம் முதலிடம்

புதுடில்லி: கடந்த 2018 ம் ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஹெல்மெட் அணியாமல் டூவிலரில் சென்ற, 43,600 உயிரிழந்தனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 21 சதவீதம் அதிகம் ஆகும். ஹெல்மெட் அணியாமல், டூவிலர் பின்னால் அமர்ந்து சென்ற 15,360 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு, குஜராத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 958 வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து சென்ற 560 பேரும் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில், 790 பேரும், பின்னால் அமர்ந்து சென்ற 450 பேரும் உயிரிழந்தனர். இந்த இரு மாநிலங்களிலும், டூவிலர் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டது. டூவிலரில் பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கு ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

கடந்த ஆண்டு, ஹெல்மெட் அணியாமல் டூவிலரில் சென்று உயிரிழந்தவர்களில், உ.பி., மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு, 6.020 பேர் உயிரிழந்தனர். 2வது இடத்தில் மஹாராஷ்டிரா அரசு (5,232) உள்ளது. தமிழகத்தில், 5,048 வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளனர். இதேபோல், கடந்த ஆண்டு, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்று,24,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம்.


Tags : Uttar Pradesh , Helmet, Sacrifice, Uttar Pradesh
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்...