சிதம்பரம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடாக மண்ணெண்ணெய் திருடும் வீடியோ இணையதளத்தில் வைரல்

கடலூர்: சிதம்பரம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடாக மண்ணெண்ணெய் திருடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கொத்தங்குடி கிராமத்தில் வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம் உள்ளது. இங்கிருந்து தான் மானாசந்து, மன்னார்குடி தெரு, கனகசபை நகர், மாரியப்பா நகர் உள்ளிட்ட பத்து​க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளுக்கு மண்ணெண்ணெய் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டுறவு சங்கத்தில் உள்ள மண்ணெண்ணெய் கிடங்கில் இருந்து, தனி நபர் சிலர் கேன்களில் மண்ணெண்ணெய் பிடிக்கும் வீடியோ வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.

அதில், ஒருவர் கேன்களில் மண்ணெண்ணெய் பிடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ காட்சிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் கிடங்கில் இருந்து முறைகேடாக மண்ணெண்ணெய் திருடப்பட்டதா? அல்லது தொடர்ச்சியாக இது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறதா? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நியாய விலை கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் மண்ணெண்ணை திருடப்படுவதால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: