×

மொபைல் போனுக்கு தடை

நன்றி குங்குமம் முத்தாரம்

இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த சர்வே ஒன்று பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக் கிறது. 49 சதவீத பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் மொபைல் போன்கள் தடைசெய்யப்பட்டதாக நினைக்கின்றனர். மீதி 38 சதவீத பெற்றோர்கள் பள்ளியில் மொபைல் போன்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

மிச்சமிருக்கும் 13 சதவீத பெற்றோர்கள் தேவையின் பொருட்டு குழந்தைகள் போனை உபயோகம் செய்யட்டுமே என்று வாதிடுகின்றனர். இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடத்துக்கு எடுத்து வரும் கேட்ஜெட்களின் சராசரி மதிப்பு 26 ஆயிரம் ரூபாய். எலெக்ட்ரானிக் சாதனங்களைக் குழந்தைகள் பயன்படுத்தாவிட்டால் அவர்கள் எப்படி அன்றாட வாழ்க்கையின் அப்டேட்டுகளுடன் போட்டி போட முடியும்? எப்படி ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கேட்ஜெட்களை இயக்க கற்றுக்கொள்ள முடியும்? என்றும் சிலர் கேள்விகளை எழுப்புகின்றனர்.

நாளுக்கு நாள் குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு வரும் கேட்ஜெட்களின் எண்ணிக்கையும் மதிப்பும் கூடிக்கொண்டே செல்கிறது. இங்கிலாந்தின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள குழந்தை களிடம் இருக்கும் கேட்ஜெட்களின் மதிப்பு இருபதாயிரம் கோடி ரூபாயைத் தாண்டுமாம். 43 சதவீத குழந்தைகள் தங்களின் பெற்றோர்களை விட விலையுயர்ந்த நவீனமான போன்களை  வைத்திருக்கிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடந்தோறும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மொபைல் பில்லுக்காக செலவு செய்கிறார்கள்.

‘‘பள்ளிக்குழந்தைகள் ஏந்தி வருகின்ற கேட்ஜெட்களின் எண்ணிக்கை மனதை உறைய வைக்கிறது...’’ என்கிறார் மொபைல் நிபுணரான எர்னஸ்ட். அத்துடன் ‘‘பள்ளிகளில் போனை தடை செய்வது இதற்கு சரியான தீர்வைத் தராது. எப்படி யிருந்தாலும் வேலை சூழலுக்குள் அவர்கள் போகும்போது அனைத்து வகையான கேட்ஜெட்களையும் பயன்படுத்தப் போகி றார்கள். பள்ளிக்கூடம் அதற்கு ஒரு பாதுகாப்பான சூழலை மட்டும் ஏற்படுத்தித் தந்தால் போதும்.

அதாவது கேட்ஜெட்களை எப்படி இயக்குவது என்பதைக் கற்றுக்கொள்ள பள்ளி தான் சரியான இடம்...’’ என்கிறார் அவர். இந்த சர்வேயை யூஸ்விட்ச் என்ற நிறு வனம் செய்திருக்கிறது. இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெற் றோர்களிடம் மூன்று மாதங்களுக்கு மேல் ஆய்வு செய்திருக்கின்றனர்.



Tags : Mobile phone,ban,England,survey
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...