ராட்சஷ உயிரினங்களை பார்க்கலாம்!

நன்றி குங்குமம்

உலகின் தலைசிறந்த மூன்றாவது உயிரியல் பூங்கா, செஸ்டர். இங்கிலாந்தின் செஷையர் கவுன்டியில், சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது இந்தப் பூங்கா. 500க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த  20 ஆயிரம் உயிரினங்கள் இங்கே வசிக்கின்றன. கடந்த வருடம் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் செஸ்டரைச் சுற்றிப்பார்த்து அசந்து போயுள்ளனர். இதில் பாதிப்பேர் அயல்நாட்டினர்.

அரசின் உதவியில்லாமல் இந்தப் பூங்கா இயங்குவது தனிச்சிறப்பு. விஷயம் இதுவல்ல.உலகிலேயே முதல் முறையாக டைனோசர், ராட்சத பாம்பு, கூரிய பற்களைக் கொண்ட புலி போன்ற அழிந்து போன பிராணிகளின் அனிமேட்ரானிக் கண்காட்சி இங்கே நடக்கிறது!

அனிமேட்ரானிக் செய்யப்பட்ட பிராணிகள் ரோபோக்கள் போல இயங்குகின்றன. இந்த அனிமேட்ரானிக் பிராணிகளைப் பிரத்யேகமாக அமெரிக்காவில் வடிவமைத்திருக்கிறார்கள். 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத உயிரினங்களை நேரில் கண்டு களிக்க ஓர் அரிய வாய்ப்பு. செப்டம்பர் 8ம் தேதி இந்தக் கண்காட்சி நிறைவடைகிறது.

Related Stories: