தொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது: சவரனுக்கு ரூ.40 உயர்வு..!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.3625-க்கும், ஒரு சவரன் ரூ.29 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் உயர்ந்து ரூ.50.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 அதிகரித்திருந்தது. தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக கடும் ஏற்றத்துடன் காணப்பட்டது. கடந்த 4-ம் தேதி காலையில் தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக பவுன் ரூ.30,120க்கு விற்கப்பட்டது. இதுவே தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாக கருதப்பட்டது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்றைய தினம் மாலையிலேயே தங்கம் விலை சற்று சரிந்து ஒரு பவுன் ரூ.29,928க்கு விற்கப்பட்டது.

அதன் பிறகு 5-ம் தேதி ஒரு பவுன் ரூ.29,928க்கும், 6-ம் தேதி ரூ.29,264, 7-ம் தேதி ரூ.29,368, 9-ம் தேதி ரூ.29,272க்கும், 10-ம் தேதி ரூ.29,192க்கும், 11-ம் தேதி ரூ.29,072, 12-ம் தேதி ரூ.28912க்கும் தங்கம் விற்கப்பட்டது. அதனையடுத்து 13-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.3,612க்கும், பவுன் ரூ.28,896க்கும் விற்கப்பட்டது. பின்னர் 14-ம் தேதி தங்கம் விலை சரிவை சந்தித்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.28 குறைந்து ஒரு கிராம் ரூ.3,584க்கும், பவுனுக்கு ரூ.224 குறைந்து ஒரு பவுன் ரூ.28,672க்கும் விற்கப்பட்டது.

15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், அதே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. பின்னர் திங்கட்கிழமை தங்கம் மார்க்கெட் தொடங்கிய நிலையில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. அதாவது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3,626 க்கும் ஒரு சவரன் ரூ.29,008 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.40 க்கு விற்பனையாகிறது.

Related Stories: