அவசரத்திற்கு அத்தனை நம்பரும் அவசியம்

அவசர உதவிகளுக்காக பல்வேறு துறைகள் விரைந்து செயல்பட்டு வந்தாலும் தகவல் பரிமாற்றத்தினால் ஏற்படும் தாமதம் பல நேரங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய பலனை தருவதில்லை. எனவே ஒவ்வொருதுறை சார்பிலும் மாநிலம் முழுவதும் ஒரேவிதமான தொடர்புஎண்ணைப் பயன்படுத்தும் பழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.  இருப்பினும் போலீஸ், தீயணைப்புத்துறை உள்ளிட்ட சில எண்களே மக்கள் மனதில் பதிந்துள்ளது.

பல்வேறு துறைகள், தேவைகளுக்கு ஏற்ப எண்களையும் நாம் குறித்து வைத்துக் கொண்டால் தொடர்பு கொள்ளவும், பயன்பெறவும் உதவிகரமாக இருக்கும்.
Advertising
Advertising

அதற்கான பட்டியல் இதோ: இலவச மருத்துவ ஆலோசனை, அரசு மருத்துவமனையில் நடைபெறும் பிரச்னைகள், தாமதமாக வரும் டாக்டர்கள், பன்றித்தொல்லை போன்ற நோய் பரப்பும் விஷயங்களை 104என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதே போல் போலீசிற்கு 100என்ற எண்ணிலும், போலீஸ் எஸ்எம்எஸ்சிற்கு 95000 99100, போலீஸ் மீதான ஊழல் புகார்க்கு எஸ்எம்எஸ்.98409 83832 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

தீயணைப்பிற்கு 101, போக்குவரத்து விதிமுறைமீறலுக்கு 103, விபத்திற்கு 100,103, போக்குவரத்து விதிமுறை மீறல் எஸ்எம்எஸ்.98400 00103, ஆம்புலன்ஸ் 102,108, பெண்களுக்கான அவசர உதவி 1091, குழந்தைகளுக்கான அவசரஉதவி 1098, மூத்தகுடிமக்களுக்கான அவசரஉதவி 1253, தேசிய நெடுஞ்சாலையில் அவசரஉதவி 1033, கடலோர பகுதிக்கான அவசரஉதவி 1093, ரத்தவங்கி அவசர உதவி 1910, கண்வங்கி அவசரஉதவி 1919 ஆகிய எண்களுக்கு தங்களின் தேவைக்கேற்பத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.

Related Stories: