பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக மோடிக்கு பா.ஜ தலைவர்கள் மட்டுமின்றி பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன. இதுகுறித்து மத்திய ரயில்வேதுறை அமைச்சரான பியூஸ் கோயல் தனது டுவிட்டரில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மிகப்பெரிய தலைவர், தீர்க்கமானவர், மோடி நம்க்கு மிகப்பெரிய முன்னோடி, நாம் அனைவரும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம், அவர் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்தார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் , நமது பிரதமர், நாடுகளின் நட்புறவை பொறுத்தவரை இந்தியாவின் நிலையை கட்டியெழுப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும் முக்கிய பங்காக இருக்கிறார். என கூறினார். அவரது தொலைநோக்குத் தலைமை இந்தியாவுக்கு புதிய பெருமைகளை உயர்த்த உதவியுள்ளது என கூறினார். அவரது நல்ல ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல பாஜக தலைவர்களிடமிருந்தும், கட்சி முழுவதிலுமிருந்து வந்தவர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் நள்ளிரவு முதல் கொட்டத் தொடங்கின. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா கட்சியின் சேவா சப்தா செப்டம்பர் 14 அன்று தொடங்கினார். மையத்தில் உள்ள ஆளும் கட்சி செப்டம்பர் 14-20 முதல் நாடு முழுவதும் எண்ணற்ற சமூக முயற்சிகளை மேற்கொள்ளும் என கூறினார். பிரதமர் செய்த சமூகப் பணிகளைக் காண்பிப்பதற்காக ஏராளமான கண்காட்சிகள் உள்ளன. மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு பல விதங்களை கொண்டது என கூறினார். சிறு நகரத்திலிருந்து உலகின் தலைநகரங்களுக்கு, கட்சி உறுப்பினர்களிலிருந்து தேசிய தலைவர், கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறந்த நிர்வாகி, பூத் ஏஜெண்டாக இருந்து உலகின் சிறந்த தலைவர் என உருவெடுத்த பிரதமர் மோடியின் வாழ்க்கை பயணம் நமக்கு உத்வேகத்தை அளிக்ககூடியது என கூறினர். மேலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related Stories: