×

சிஎல்ஆர்ஐ வளாகத்தில் உள்ள மான்களை மாற்றக்கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற வளாகங்களில் 1500 மான்கள் உள்ளன. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் உள்ள மான்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவற்றை வேறு இடத்திற்கு மாற்ற தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, இந்த மான்களை பிடிக்கவும், வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யவும் தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவிற்கு  பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் உத்தரவிட்டனர். வழக்கு  நவம்பர் முதல் வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags : Government ,Tamil Nadu ,Respondent ,Tamil Nadu Govt , CLRI Complex, Mans, Government of Tamil Nadu, Icort
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...