ஆம் ஆத்மி அரசாங்கத்தின் திட்டங்களால் டெல்லி மக்கள் பொருளாதார மந்த நிலையை உணரவில்லை : முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு

புதுடெல்லி: தாமும் வர்த்தகர் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் அவர்களின் வேதனையை  புரிந்து கொண்டுள்ளதாகவும், அதே சமயத்தில், டெல்லி மாநில அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களால் பொருளாதார மந்தநிலையை பற்றி கவலை கொள்ளவில்லை என்றும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் வர்த்தக மற்றும் தொழில்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: நான் ஒரு வர்த்தகர் குடும்பத்தைச்  சேர்ந்தவன். அதனால் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் வேதனை, வலிகள் மற்றும்  பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டுக்ளளேன். தற்போது வர்த்தகம் “மந்தமாக” உள்ளது. மக்களின் சம்பளம் உயரவில்லை. அதேசமயத்தில் அவர்களின் செலவுகள் அதிகரித்து வருகின்றன. எனினும் அவற்றை உணராத வகையில் டெல்லி மாநில  அரசு ஏராளமான ஆதரவை வழங்கியுள்ளது. அதனால் அவர்கள்  பொருளாதாரத்தின் மந்தநிலையின் தாக்கத்தை உணரவில்லை.

குறிப்பாக,  நாங்கள் 200 யூனிட் வரை மின்சார  கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளோம். இலவச குடிநீரை வழங்கியு–்ளளோம். குடிநீர் நிலுவை கட்டணங்களை தள்ளுபடி செய்துள்ளோம். தற்போது, பெண்களுக்கு இலவச  ​​பேருந்து பயணத்தை அறிவித்துள்ளோம்.  பொருளாதார மந்தநிலையின் பெரும் தாக்கதில் சிக்கியுள்ளது. அதனை மீட்டுக் கொண்டுர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.  நான் இன்று பல வர்த்தகர்களை சந்தித்தேன்.  அவர்கள் விற்றுமுதல் சுமார் 30 முதல் 40 சதவிகிதம் குறைந்துவிட்டது என்று என்னிடம் கூறினர். எனினும் பொருளாதாரம் விரைவில் மேம்படும் என்று நம்புகிறேன். இதனால் வர்த்தகமும் மேம்படும். பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: