பலாத்காரம் செய்தபோது பதிவு செய்த வீடியோவை திலீப்பிடம் தரக்கூடாது: பிரபல நடிகை உச்ச நீதிமன்றத்தில் மனு

திருவனந்தபுரம்: தன்னை பலாத்காரம் செய்தபோது பதிவு செய்யப்பட்ட காட்சிகளை நடிகர் திலீப்பிடம் ஒப்படைக்கக் கூடாது என்று பாதிக்கப்பட்ட மலையாள நடிகை உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பிரபல மலையாள முன்னணி நடிகை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருச்சூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு காரில் செல்லும்ேபாது ஒரு கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த நடிகையின் முன்னாள் டிரைவர் பல்சர் சுனில் உட்பட 8 பேரை போலீசார் ைகது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்திற்கு சதி திட்டம் தீட்டியது பிரபல மலையாள நடிகர் திலீப் என்று தெரிய வந்தது. இதையடுத்து கொச்சி போலீசார் திலீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். 85 நாள் சிறை வாசத்திற்கு பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் நடிகையை பலாத்காரம் செய்த கும்பல் அந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்தது. வழக்கு தொடர்பாக அந்த காட்சிகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி நடிகர் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதற்கு பாதிக்கப்பட்ட நடிகை எதிர்ப்பு தெரிவித்தார். திலீப்பிடம் இந்த காட்சிகளை ஒப்படைக்க போலீஸ் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திலீப்பின் மனு தள்ளுபடி ெசய்யப்பட்டது. இதையடுத்து திலீப் உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த சில நாட்களுக்கு முன் விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கூறி கேரள அரசிற்கு ேநாட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், திலீப் தாக்கல் செய்த மனுவில் தன்னையும் இணைத்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த மனுவில், ‘‘என் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகளை திலீப்பிடம் ஒப்படைக்க கூடாது. அது என் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும். அந்த காட்சிகளை திலீப் முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே எந்த காரணம் கொண்டும் அந்த காட்சிகளை ஒப்படைக்க கூடாது’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: