சாட்சி சொன்னால் கொலை செய்வேன் டான்ஸ் மாஸ்டரை மிரட்டியவர் கைது

சென்னை: வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக சாட்சியம் அளித்தால் கொலை ெசய்துவிடுவோம் என்று டான்ஸ் மாஸ்டரை மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(24). டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி சீனிவாசன் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் வழிமறித்த இருவர் கத்தியால் குத்தினர். இதில் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் படி சீனிவாசன் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து  சூளைமேடு காமராஜர் நகர் 3வது தெருவை சேர்ந்த வெற்றி கண்ணன்(34), சூளைமேடு கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக்(26) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில் வழக்கு விசாரணை வரும் 19ம் தேதி நீதிமன்றத்தில் வருகிறது. இதனால் குற்றவாளிகள் இருவரும் டான்ஸ் மாஸ்டர் சீனிவாசனை  அவரது வீட்டிற்கு சென்று நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க கூடாது. அப்படி சாட்சியம் அளித்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு வந்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் சம்பவம் குறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி கொலை மிரட்டல் விடுத்த வெற்றி கண்ணனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: