தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த இரண்டு பேர் கைது : பெண் உள்ளிட்ட 4 பேருக்கு வலை

பெங்களூரு:  கர்நாடக மாநிலம் ஹுப்பளியை சேர்ந்தவர் சண்முகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தொழில் அதிபரான இவரிடம், சமூக வலை

தளம் வாயிலாக ரஞ்சிதா என்ற பெண் அறிமுகமானார். ரஞ்சிதா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருவதாக கூறினார். இதை நம்பிய தொழில் அதிபர் ரஞ்சிதாவிடம் அடிக்கடி பேச தொடங்கினார். இதையடுத்து தொழில் அதிபரை தனது வலையில் விழ வைத்த ரஞ்சிதா பெங்களூரு வரும்படி அழைப்பு விடுத்தார்.  அதன்படி ஆக.25ம் தேதி சண்முகம் பெங்களூரு வந்தார். இங்கு ரஞ்சிதாவை நேரில் சந்தித்தார். அப்போது ரஞ்சிதா அவரை தனக்கு தெரிந்த கனகபுராவில் உள்ள தனியார் ரிசார்ட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
Advertising
Advertising

இந்நிலையில் ரிசார்ட்டிற்கு வந்த 6 பேர் கும்பல், இருவரும் இருந்த அறைக்குள் நுழைந்து, அரை நிர்வாண நிலையில் இருவரையும் பிடித்து விட்டனர். அதை போட்டோ மற்றும் வீடியோ எடுத்த கும்பல், சண்முகத்தை தாக்கினர். பின்னர் இளம் பெண்ணுடன் தனிமையில் இருக்கும்  போட்டோவை, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைக்க போவதாக மிரட்டினர். இதில் சண்முகம் பயந்துபோனதும், கும்பலை சேர்ந்த ஒருவர் ரூ.3 லட்சம் கொடுத்தால், வீடியோ, போட்டோவை அழித்து விடுவதாகவும், இல்லையென்றால் தொலைக்காட்சியில் ஒளிபரபரப்பு செய்வதாகவும்  கூறினார். இதில் பதட்டம் அடைந்த சண்முகம் தன்னிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை கொடுத்தார். பின்னர் சில நாட்கள் கழித்து கேட்ட தொகை ரூ.3 லட்சத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளார்.

இதை ஏற்ற கும்பல் அவரை விடுவித்தது. சொந்த ஊருக்கு திரும்பிய அவர் இது குறித்து தனது நண்பர்களுடன் ஆலோசனை நடத்தி செப்.12ம் தேதி கனகபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து ஹனிடிராப் கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி நிருபர் சந்திரசேகர், என்.சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெங்களூரு விஜயநகரை சேர்ந்த ரஞ்சிதா, வி.சீனிவாஸ், விகாஷ், சிவு ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: