×

வெறிநாய் கடியிலிருந்து தப்பிக்க 30 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி: ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: “வெறி நாய்க்கடி இல்லா சென்னை” திட்டத்தின்கீழ் இதுவரை 30 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். “வெறிநாய்க்கடி இல்லா சென்னை” திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. துணை ஆணையர் (சுகாதாரம் ) மதுசுதன் ரெட்டி தலைமையில் மாநகர நல அலுவலர் ெசந்நில்நாதன் கண்காணிப்பில் மண்டலங்களில் மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் ஆகியோரின் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மாதவரம் மண்டலத்தில் 8,846 நாய்களுக்கும், ஆலந்தூர் மண்டலத்தில் 3,474 நாய்களுக்கும்,  அம்பத்தூர் மண்டலத்தில் 8,243 நாய்களுக்கும்,  சோழிங்கநல்லூர்  மண்டலத்தில் 4,461 நாய்களுக்கும், வளசரவாக்கம் மண்டலத்தில் 5,869  நாய்களுக்கும் என மொத்தம் 30,893 நாய்களுக்கு இதுவரை  தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்நிலையில் பொதுமக்கள் தாமாக முன்வந்து தாங்கள் வளர்க்கும் 2013 செல்லப்பிராணிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


Tags : Prakash ,Dogs Escape Vaccines For Vaccination: Commissioner Prakash , Vaccination, 30 thousand , escape rabies, Commissioner Prakash,informs
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...