×

டெல்டா பாசனத்துக்கு நீர்திறப்பு குறைப்பு

மேட்டூர்: மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 19 ஆயிரம்  கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, 17 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அதேபோல், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு 18 ஆயிரம் கனஅடியில் இருந்து, 16 ஆயிரம் கனஅடியாக  குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 120 அடி, நீர் இருப்பு 93.47 டிஎம்சி.



Tags : Reduction , hydrophobia , delta, irrigation
× RELATED டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்