காமராஜர் துறைமுக தலைவரானார் சுனில் பாலிவால்

சென்னை: காமராஜர் துறைமுக தலைவராக சுனில் பாலிவால் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் மினிரத்னா நிறுவனமான காமராஜர் துறைமுக நிறுவனம் சென்னை எண்ணூரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை  இயக்குனராக சுனில் பாலீவால் நேற்று  பொறுப்பேற்று கொண்டார். கணினி அறிவியில் பிரிவில் பி.டெக் கணினி அறிவியல் படிப்பை கான்பூர் ஐஐடியிலும், லண்டன் மற்றும் அமெரிக்காவில் முதுகலை படிப்பையும் முடித்தார்.

1993ம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட சுனில் பாலீவால் முதல் முதலாக கடலூர் மாவட்ட  துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

மேலும் நாகப்பட்டினம் மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சாலை ேமம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு தொழில்  முன்னேற்ற நிறுவன மேலாண்மை இயக்குனர், வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை செயலாளர், ஆவின் மேலாண் இயக்குனர், உயர் கல்வித் துறை முதன்மை செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை முதன்மை செயலாளர்  உள்ளிட்ட பணிகளில் இவர் பணியாற்றிவுள்ளார்.

Related Stories: