தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது: திமுக கண்டனம்

சென்னை:  அமெரிக்க மென்பொருள் நிறுவனமான சிடிஎஸ், அதிமுக அரசுக்கு லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியிருக்கிறது. இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான சிடிஎஸ், சென்னையில் புதிய கட்டிடம் கட்ட அனுமதிக்காக, அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தி இருக்கிறது.  தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்திருக்கிறது.லஞ்சம் தந்தவர்களுக்கு அமெரிக்கா தண்டனை தந்திருக்கிறது. லஞ்சம் வாங்கிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது எப்ஐஆர் கூட போடாமல் பாதுகாக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. மத்திய அரசும், சிபிஐயும் கண்டும் காணாமல் இதை  ஊக்குவிக்கின்றனவா.

Related Stories: