இந்தியை திணிக்க முயன்றால் தோற்கடிக்கப்படும்: வைகோ ஆவேசம்

சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் நக்கீரன் செய்தி வெளியிட்டது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்படி நக்கீரன் கோபாலை கடந்தாண்டு அக்டோபர் 9ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரை விடுவிக்க கோரி வைகோ தலைமையில் ஏராளமானோர் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, வைகோ காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அப்புறப்படுத்த முயன்ற போலீசாருக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது என இந்திய தண்டனை சட்டம் 190, 353, 290 ஆகிய பிரிவுகளின் கீழ்  போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நேற்று எழும்பூர் 14வது மாஜிஸ்திரேட் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், இந்த வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ தொடர்பான வழக்குகளை விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் வழக்கை வரும் அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: சமஸ்கிருதம் ஏற்கனவே செத்துப்போன மொழி, இந்தியை திணித்து ஒரு நாட்டை நேர் படுத்தி விடலாம் என்று இந்த அரசு முயன்றால் அது தோற்கடிக்கப்படும். இந்திய நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும்.

Related Stories: