கச்சா எண்ணெய் கிடுகிடு பெட்ரோல் விலை உயருமா?

புதுடெல்லி: சவூதியில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடும் உயர்வை அடைந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  சவூதி அரேபியாவில், அரசு நிறுவனமான அரம்கோவுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. இவற்றில் புக்கியாக் மற்றும் குராயிஸ் ஆகிய இடங்களில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனால் இந்த ஆலைகளில் சுமார் 50 சதவீத எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு நேற்று 19.5 சதவீதம் உயர்ந்து 71.95 ஆக விற்பனையானது. இது 1988க்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாகும். இதுபோல், வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணெய் 15.5 சதவீதம் உயர்ந்து 63.34 டாலராக விற்கப்பட்டது. இது தற்காலிக உயர்வுதான் என்றாலும், இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று கூறப்படுகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் ₹74.85க்கும் டீசல் ₹69.15க்கும் விற்கப்பட்டது.எனினும், இந்தியாவுக்கு எண்ணெய் சப்ளை பாதிக்கப்படாது என அரம்கோ நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக இந்திய எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: