தொடர் சரிவுக்கு பிறகு தங்கம் சவரனுக்கு ரூ.288 உயர்வு

சென்னை: சவூதியில் நடந்த தாக்குதல் காரணமாக, சென்னையில் ஆபரண தங்கம் நேற்று சவரனுக்கு ₹288 அதிகரித்து, ₹28,960க்கு விற்பனையானது. சென்னையில் ஆபரண தங்கம் கடந்த 4ம் தேதி காலை சவரனுக்கு ₹288 உயர்ந்து ₹30,120க்கு விற்பனையானது. இதுவே தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாக கருதப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பால் தங்கம் விலை சரிய தொடங்கியது. கடந்த 6ம் தேதி முதல் கடந்த 14ம் தேதி வரை தங்கம் சவரனுக்கு ₹1,256 குறைந்தது. கடந்த 14ம் தேதி சவரன் ₹28,672க்கு விற்கப்பட்டது.  ஆனால், சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது கடந்த 14ம் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் காரணமாக தங்கம் விலை சர்வதேச சந்தையி–்ல் ஒரு அவுன்சுக்கு (31.103 கிராம்) ஒரே நாளில் 15 டாலர் வரை உயர்ந்தது.

Advertising
Advertising

இதன் எதிரொலியாக சென்னையில் ஆபரண தங்கம் நேற்று காலை சவரனுக்கு ₹368 உயர்ந்து ₹29,032க்கு  விற்கப்பட்டது. மாலையில் கிராமுக்கு 6 ரூபாய் குறைந்தது. இதனால் சனிக்கிழமையை விட சவரனுக்கு ₹288 அதிகரித்து கிராம் ₹3,620க்கும், சவரன் ₹28,960க்கும் வி்ற்கப்பட்டது.

 இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க கவுரவ செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு டிராய் அவுன்சுக்கு 15 டாலருக்கு மேல் உயர்ந்தது. அதோடு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் சரிந்து விட்டது. இதனால் இங்கும் விலை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் நீடிக்கும்’’ என்றார்.

Related Stories: