×

சி ல் லி பா யி ன் ட்...

* கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 65வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டித் தொடர் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. அனைத்து ஆட்டங்களும் சோனி டென் -2 சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகின்றன.

* டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் (937) முதல் இடத்திலும், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (903) 2வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

* கடந்த பிப்ரவரியில் தன்னை இரண்டு சூதாட்ட தரகர்கள் அணுகியதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஒருவர் ஊழல்
தடுப்புக் குழுவிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் பாப்னா, ஜிதேந்திரா கோத்தாரி ஆகியோர் மீது பெங்களூரு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

* விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடருக்கான தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக், துணை கேப்டனாக விஜய் ஷங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 69 கிலோ எடை பிரிவு 2வது சுற்றில், இந்திய வீரர் துரியோதன் நேகி 1-4 என்ற புள்ளிக் கணக்கில் ஜோர்டான் வீரர் ஜியாத் ஈஷாஷிடம் தோற்று வெளியேறினார்.

* போஸ்னியாவில் நடைபெற்ற பஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தோற்று 2வது இடம் பிடித்த இந்திய வீரர் சுமித் நாகல், ஏடிபி ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 15 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 159வது இடத்தை பிடித்துள்ளார்.

Tags : Li Pai Yin T ,Li , Li Pai Yin T ...
× RELATED சி ல் லி பா யி ன் ட்...