×

பொங்கலூர் வட்டாரத்தில் காளிபிளவர் சாகுபடி செழிப்பு மகசூல் அதிகரிப்பதால் மகிழ்ச்சி

பொங்கலூர்: பொங்கலூர் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள காளிபிளவர் சாகுபடி சமீபத்தில் பெய்த மழையால் செழிப்படைந்துள்ளது. இதனால் மகசூல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக விளங்குகிறது. அந்த வகையில் தற்போது கழிவேரிபாளையம், கள்ளிப்பாளையம், வாவிபாளையம், கெங்கநாயக்கன்பாளையம், பொங்கலூர் போன்ற கிராம பகுதிகளில் தற்போது காளிபிளவர் விவசாயம் தீவிரமடைந்துள்ளது.

சரியான  நேரத்தில் பருவமழை பெய்த காரணத்தால் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது காளிபிளவர் விவசாயம் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது, இது பயிர்செய்த 70 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும்,  கோவையிலிருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச்செல்கின்றனர். ஒரு ஏக்கருக்கு சுமார் பத்தாயிரம் பூ கிடைக்கிறது அதன் மூலம் ரூ.2 லட்சம் வருமானம் எங்களுக்கு கிடைக்கும், என்றார்.

Tags : region ,Pongalur , Pongalur, cauliflower, yield, happiness
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!