கட்டுமான தொழிலாளர்களுக்கு 30 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்: அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி

சென்னை: கட்டுமான தொழிலாளர் வாரியம் மூலம் 30 லட்சம் தொழிலாளர்களுக்கு இலவச பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என அமைச்சர்  நிலோபர் கபில் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் 30-வது கூட்டம் அதன்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தொழிலாளர் நல அமைச்சர் நிலோபர்கபில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொதுப்பணித் துறை, நிதித் துறை, வீட்டுவசதி,  நெடுஞ்சாலை, தமிழ்நாடு கட்டுமான கழகம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகள்,  தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்போர் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் நிலோபர்கபில், கட்டுமான தொழிலாளர்கள் 30 லட்சம் பேருக்கு 2  ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கையுறை, தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன என்று தெரிவித்தார். வரும் 19-ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி,முதல்கட்டமாக 25 ஆயிரம் பேருக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உள்ளதாகவும், மற்ற  உறுப்பினர்களுக்கு படிப்படியாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் நிலோபர்கபில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: