பால்விலை உயர்வு எதிரொலி: ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.240 விற்பனை

ஸ்ரீவில்லிபுத்தூர்: பால்விலை உயர்வு தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்கோவா விலை கிலோ ரூ.20 உயர்ந்துள்ளது. பால்கோவா விலை கிலோ ரூ.240 விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.260 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தி அறிவித்தன. இதனால் டீ, காபி உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. ஆவின் தயாரிப்பு நெய், பால்கோவா போன்றவை வருகிற 18-ந்தேதி முதல் விலை உயர்த்தப்பட உள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலையும் உயர்ந்துள்ளது.

Advertising
Advertising

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ருசியாகவும், திகட்டாமலும் இருக்கும். 1940ம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு வந்த பால்கோவாவானது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியின் குடிசை தொழிலாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் பால்கோவா மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பால் ஹல்வா, பால் தேடா, பால் கேக், கேரட் பால்கோவா மற்றும் பியூர் கோவா என பலவகையில் தயாரிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதால் இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்த பால்கோவா கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டு வந்தது. பால்விலை உயர்வு தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் பால்கோவா விலை கிலோ ரூ.20  உயர்ந்து ரூ.260 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: