×

அயோத்தி வழக்கை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் சம்மதம்: நேரலை செய்வதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என அறிக்கை சமர்பிக்க உத்தரவு

டெல்லி: அயோத்தி வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம் தெரிவித்துள்ளது. நேரலை செய்வதற்கான வாய்ப்புக்கள் எந்த அளவிக்கு உள்ளன என அறிக்கை சமர்ப்பிக்க பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு அயோத்தியில் கோயில் கட்டலாமா?, மசூதி கட்டலாமா?, அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை என்பது நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையானது பகுதியளவு நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில் அயோத்தி வழக்கை நேரலை செய்யக்கோரி ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதியான கே.என். கோவிந்தாச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் மாற்றியது. இந்நிலையில் இந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சந்திரசூட், பாப்தே, அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சம்மதம் தெரிவித்துள்ளது. நேரலை செய்வதற்கான வாய்ப்புக்கள் எந்த அளவிக்கு உள்ளன என அறிக்கை சமர்ப்பிக்க பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்குகள் எதுவும் அண்மையில் நேரலை செய்யப்படாத நிலையில், அயோத்தி வழக்கை நேரலை செய்ய சம்மதம் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Supreme Court ,Ayodhya ,directives registrar , Ayodhya case, live, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...