×

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: புதிய மின்சார வாகன கொள்கையில் தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு விதிக்கப்படும் என்று புதிய மின்சார வாகன கொள்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மின்வாகன தயாரிப்பாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் வரிவிலக்கு மற்றும் முதலீட்டு மானியம் காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.


Tags : Government ,Tamil Nadu , Tamil Nadu, electric vehicle, 100% tax exemption, new electric vehicle policy, Government of Tamil Nadu
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...