×

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

 ஜம்மு-காஷ்மீர்:  ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவை ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை சந்திக்க காஷ்மீர் செல்வதற்கு அனுமதி கோரியுள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. 370-ஆவது பிரிவு ரத்து, மாநில மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவும் விசாரணைக்கு வந்துள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் காஷ்மீரில் குழந்தைகள் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் உரிமை ஆர்வலர் எனாக்ஷி கங்குலி, விரிவுரையாளர் சாந்தா சின்ஹா ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவையும் நீதிபதிகள் விசாரணை செய்ய உள்ளனர்.

அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை அனுமதிக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வருகிறது. காஷ்மீர் தொடர்பாக மேலும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவை அனைத்தையும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

Tags : SC ,cancellation ,Jammu ,Kashmir , Jammu and Kashmir, Special Status of Cancellation, Petition, Petition, Supreme Court
× RELATED பெரம்பலூரில் பாஜ எம்பியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்