பரூக் அப்துல்லா எங்கே என்பது குறித்து வரும் 30ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்தார். வைகோ வழக்கை விசாரணைக்கு ஏற்று உச்சநீதிமன்றம் 30ம் தேதிக்குள் பதில் தருமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காஷ்மீரில் தலைவர்கள் எக்காரணமும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மனுவில் வைகோ புகார் தெரிவித்திருந்தார். காஷ்மீரில் ஜனநாயகம் என்பதே  இல்லாத நிலை உள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. பரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என்று வைகோ வழக்கறிஞர் வாதிட்டார்.

Related Stories: