×

இந்தி மொழி அடையாள மொழியாக ஒருபோதும் இருக்க முடியாது: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

சென்னை: இந்தி மொழி அடையாள மொழியாக ஒருபோதும் இருக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் ராமசாமி படையாச்சியார் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 8வது அட்டவணையில் தேசிய மொழியாக 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றை மொழி பேசும் நாடல்ல. இந்திய ஒரு இனம், ஒரு மதத்தை சேர்ந்த நாடல்ல. ஒற்றை மொழி என்பதை நிச்சயமாக ஏற்க முடியாது. பிற மொழிகள் பேசும் மக்கள் ஒருபோதும் இந்தியை ஏற்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.


Tags : Ramadas , Hindi, India, PMK, Ramadoss
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...