பாரிமுனை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெரம்பூர்: பாரிமுனையில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில்  ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. பாரிமுனையில் பழைய பேருந்து நிலையத்தில் 25க்கும்  மேற்பட்ட கடைகள் உள்ளன. அதில் 10க்கும் மேற்பட்ட கடைகள் பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து நடத்து நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இவற்றை அப்புறப்படுத்த மாநகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் சென்னை மாநகராட்சி 5வது மண்டல அதிகாரி நடராஜன் உத்தரவின்பேரில் செயற்பொறியாளர் சொக்கலிங்கம் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள், நேற்று சம்பவ இடத்துக்கு வந்து  ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர், இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க எஸ்பினேடு  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: