செல்போன் திருடிய சிறுவன் சிக்கினான்

சென்னை: சென்னை அண்ணாநகர் என்.பிளாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செல்போன் திருடிய அண்ணாநகரை சேர்ந்த அப்பு (எ) பிரவீன் குமார் (20) மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேள்விமங்கலம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் (42), அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், டைனி செக்டர் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தார். இவர், நேற்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Advertising
Advertising

இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். குன்றத்தூர் அருகே லாரியில் மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த டிரைவர்கள் வினோத்குமார் (24),  பத்மநாபன் (36) ஆகியோரை போலீசார் கைது செய்து, 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். வண்ணாரப்பேட்டை, வீரகுட்டி தெருவை சேர்ந்த சம்பத்குமார் (32) என்பவர், அம்பத்தூர் கள்ளிகுப்பம் சர்வீஸ் சாலையில் பைக்கில் சென்றபோது, 4 பேர் அவரை வழிமறித்து, செல்போன், பணம், பர்ஸ் மற்றும் பைக்கை பறித்து கொண்டு தப்பினர்.

Related Stories: